புனே

புனே நகரில் உள்ள வைராலஜிஆய்வு நிறுவனம் முதல் முறையாக கொரோனா வைரஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

உலகெங்கும் உள்ள நாடுகளில் மொத்தம் 6 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  சுமார் 27 லட்சத்துக்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று ஒரு நாளில் இத்தாலியில் 919 பேர் மரணம் அடைந்து அங்கு மரணம் அடைந்தோர்  எண்ணிக்கை 9134 பேரை எட்டியுள்ளது.  அமெரிக்காவில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டுள்ளன்ர்.

இதுவரை இந்தியாவில் 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 19 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.  இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த ஒரு மாணவிக்கு முதலில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  அவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் இருந்த கொரோனா வைரஸ் மின்னணு நுண்ணோக்கி மூலம் படமாக்கப்பட்டுள்ளது

இந்த புகைப்படத்தை புனேவில் உள்ள வைராலஜி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.  கொரோனா வைரஸின் தோற்றம் கடந்த 2012 ஆம் ஆண்டில் பரவிய மெர்ஸி சி ஓ வி வைரஸ் மற்றும் 2002 ஆம் ஆண்டில் பரவிய சார்ஸ் சி ஓ வி வைரஸ் ஆகியவை போல் உள்ளதாக அறிவியல் ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.

கொரோனா என்னும் சொல்லுக்கு லத்தின் மொழியில் கிரீடம் என்னும் பொருள் உளதால் கிரீடம் போல் வெளித்தோற்றம் கொண்ட இந்த வைரசுக்கு கொரோனா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.