பெர்லின்
இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் மது அருந்துவோர் எண்ணிக்கை 38% உயர்ந்துள்ளதாக சர்வதேச கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு எனவும் குடி குடியை கெடுக்கும் எனவும் விளம்பரங்களுடன் மது விற்பனை நடந்து வருகிறது. கடந்த 1990க்கு முன்பு அதிக வருமானம் உள்ள நாடுகளில் மட்டுமே இருந்து வந்த மதுப்பழக்கம் தற்போது அனைத்து நாடுகளிலும் பரவி உள்ளதாகவும் அதனால் பல வித நோய்கள் பரவி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றன்ர்
ஜெர்மனி நாட்டில் உள்ள தி லான்சட் ஜர்னல் என்னும் பத்திரிகை உலக நாடுகளில் மது அருந்துவோர் மற்றும் மதுவின் அளவுகள் குறித்த ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இந்த கணக்கெடுப்பு இந்தியா உள்ளிட்ட 189 நாடுகளில் நடந்துள்ளது.
இந்த கணக்கெடுப்பில் இந்தியாவில் கடந்த 2010 முதல் 2017 வரையிலான ஏழு ஆண்டுகளில் மது அருந்துவோர் எண்ணிக்கை 38% அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அத்துடன் மது அருந்தும் ஒவ்வொருவரும் வருடத்துக்கு சராசரியாக 4.3 முதல் 5.9 லிட்டர் வரை மது அருந்துவகாதவும் அறியப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் சராசரியாக ஒவ்வொரு மது அருந்துவோரும் 9.3 முதல் 9.8 லிட்டர் வரை மது அருந்துகின்றனர். உலகெங்கும் உள்ள மக்களில் மது அருந்துவோர் எண்ணிக்கை 70% அதிகரித்துள்ளது. இதே நிலையில் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்தால் வரும் 2030க்குள் மக்கட் தொகையில் பாதிக்கு மேல் மது அருந்துவோர் எண்ணிக்கை இருக்கும் என கூறப்படுகிறது.
அதிக வருமானம் உள்ள நாடுகளான கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மது அருந்துவோர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருகிறது. மத்திய வருமானம் உள்ள நாடுகளான இந்தியா, சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் மது அருந்துவோர் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்நிலை நீடித்தால் ஐரோப்பிய நாடுகளில் வரும் 2030 ஆம் வருடம் மது அருந்துவோர் யாரும் இருக்க மாட்டாரக்ள் என கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.