டெல்லி: வரலாறு காணாத அளவுக்கு, ஜிடிபியானது 6 ஆண்டுகளில் இல்லாத சரிவை சந்தித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார நிலைமை குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் சில விவரங்களை வெளியிட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில், ஜூலை, செப்டம்பர் காலாண்டில் 4.5 சதவீதமாக ஜிடிபி இருக்கிறது.
இதற்கு முன்பாக, பொருளாதார வளர்ச்சி 2013ம் ஆண்டு 4.3 ஆக இருந்திருக்கிறது. அதேபோல, கடந்தாண்டு 2வது காலாண்டில் ஜிடிபி 6.9 சதவீதமாகவும் இருந்தது. அதன்பிறகு, ஏப்ரல்,செப்டம்பர் கணக்கீட்டில் 4.8 சதவீதம் என்ற அளவில் இருந்திருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய போது, நாட்டின் உண்மையான ஜிடிபியானது, 2009ம் ஆண்டில் 6.4 ஆக இருந்தது. 2014-19 ஆண்டில் 7.5 ஆக இருந்தது. ஆகவே, ஜிடிபி குறைகிறது என்று தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறி இருந்தார்.
இதனிடையே, ஜிடிபி குறைவுக்கு மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளே காரணம் என்று காங்கிரசின் செய்தி தொடர்பாளர் ரந்தீர்சிங் சுர்ஜிவாலா கூறி இருக்கிறார்.