டோக்கியோ

ந்தியாவின் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி ஒலிம்பிக் தனி நபர் தரவரிசை சுற்றில் 9 ஆம் இடத்தை பிடித்துள்ளார்.

லக அளவில் இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள் என்பது ஒரு கனவாக இருக்கிறது. இது வெறும் போட்டி மட்டுமல்ல  மாறாக விளையாட்டு வீரர்களின் நெடுநாள் உழைப்புக்குக் கிடைக்கும் ஒரு சிறந்த அங்கீகாரம் ஆகும்.  சென்ற வருடம் ஜப்பானில் இந்த போட்டிகள் நடைபெறுவதாக இருந்தன.

ஆனால் கொரோனா பெறும் தொற்று காரணமாக கடந்த ஆண்டு நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு நடத்தப்படுகிறது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அமெரிக்காவைச் சேர்ந்த 613 வீரர்களும், ஜப்பானைச் சேர்ந்த 552 வீரர்களும், சீனாவைச் சேர்ந்த 406 வீரர்களும், ஜெர்மனியைச் சேர்ந்த 425 வீரர்களும், இந்தியாவைச் சேர்ந்த 125 வீரர்களும் களத்தில் இறங்கக் காத்திருக்கின்றனர். ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள, இந்தியாவில் இருந்து மொத்தம் 127 வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.

இன்று காலையில் தகுதி நிலை தரவரிசை சுற்றில் இந்திய வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். அதிகாலை 5.30 மணிக்கு வில்வித்தை போட்டிக்கான தகுதி நிலை சுற்று தொடங்கியது. இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 663 புள்ளிகள் எடுத்து 9வது இடத்தை பிடித்தார். இதில் முதல் மூன்று இடத்தை கொரிய வீராங்கனைகள் பிடித்தனர். சென்ற ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட தீபிகா குமாரி, தனிநபர் தகுதிப்பிரிவில் 20வது இடத்தை பிடித்திருந்தார்.