டெல்லி:
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 51.08% ஆக அதிகரித்து இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகமான ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் தொடங்கிய மார்ச் 25ந்தேதியின்போது குணமடை டோவார் எண்ணிக்கை 51 சதவிகிதமாக இருந்து வந்த நிலையில், இன்றைய தேதிப்படி (ஜூன் 15ந்தேதி) 0.8 சதவிகிதம் அதிகரித்து, 51.08 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்து.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மேலும் 11,382 பேர் பாதிக்கப்பட்டு, மொத்தம் எண்ணிக்கை 3லட்சத்து 33ஆயிரத்து 008 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 321 பேர் பலியான நிலையில், மொத்த பலி 9,520 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் இதுவரை 1லட்சத்து 69 ஆயிரத்து 689 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்துள்ள ஐசிஎம்ஆர் அதிகாரிகள், மார்ச் 25, 2020 அன்று நாடு முழுவதும் லாக் டவுன் துவக்கத்திலிருந்து இந்தியாவின் கொரோனா வைரஸ் மீட்பு விகிதத்தில் நிலையான முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.
அதாவது மீட்பு வீதம் 51% ஐ தாண்டியது; ஜூன் 15, 2020 நிலவரப்படி 51.08% ஆக மேம்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1.1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. மொத்தம் 1,15,519 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 57,74,133 மாதிரிகளை இந்தியா பரிசோதித்துள்ளது என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.