டெல்லி:

ந்தியாவில்  கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,274-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிற்கு 32 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 773 பேருக்கு புதிதாக நொய் தொற்று உறுதியாகி உள்ளதாகவும் இந்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

மேலும்  கொரோனாவால் பாதிக்கப்பட்ட 411 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.129 பேர் உயிரிழந்து இருப்தாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதற்கிடையில்  டெல்லியில் ராணுவத்தினர் குடியிருப்பில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த குடியிருப்பில் தீவிரமாக தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்குள்ளவர்கள்  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில், முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.  மகாராஷ்டிராவில் 64 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,018 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு முகக்கவசம் இல்லாமல் மக்கள் வெளியே வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

2வது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ள நிலையில் உயிரிழப்பும் 8 ஆக உயர்ந்து உள்ளது.

3வது இடத்தில் டெல்லியும் (576), 4வது இடத்தில் தெலங்கானா (427), 5வது இடத்தில் உத்தரப்பிரதேசம் (343)  உள்ளன.  மேலும்,  கோவாவில் 7 பேருக்கும், புதுச்சேரியில் 5, ஜார்க்கண்டில் 4, மணிப்பூரில் 2, அருணாசல பிரதேசம், திரிபுரா, மிசோரம் மாநிலங்களில் தலா ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.  வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படவில்லை.