டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,39,350 ஆக உயர்ந்து 35,786 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று இந்தியாவில் 54,750 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 16,39,350 ஆகி உள்ளது. நேற்று 783 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 35,786 ஆகி உள்ளது. நேற்று 37,425 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 10,59,093 ஆகி உள்ளது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,44,048 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 11,147 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,11,798 ஆகி உள்ளது நேற்று 266 பேர் உயிர் இழந்து மொத்தம் 14,729 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 8,860 பேர் குணமடைந்து மொத்தம் 2,48,615 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 5,864 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,39,978 ஆகி உள்ளது இதில் நேற்று 100 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,841 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,295 பேர் குணமடைந்து மொத்தம் 1,78,178 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 1,093 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,34,403 ஆகி உள்ளது இதில் நேற்று 29 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,936 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,091 பேர் குணமடைந்து மொத்தம் 1,19,724 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 10,167 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,30,557 ஆகி உள்ளது இதில் நேற்று 68 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,281 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 4,618 பேர் குணமடைந்து மொத்தம் 60,024 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 6,128 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,18,632 ஆகி உள்ளது இதில் நேற்று 83 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 2,230 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,793 பேர் குணமடைந்து மொத்தம் 46,694 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.