இந்தியாவிலும் இட்லர், இடி அமீன் போல 3 சர்வாதிகாரிகள்
உலக சர்வாதிகாரிகளிலேயே கொடுங்கோலர்கள் என்று கருதப்படும் இட்லர், இடி அமீன் ஆகியோர் எங்கள் முன் எம்மாத்திரம் என்று கொக்கரிக்கும் மூன்று பேர் இங்கே உண்டு!
மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோர் தான் அந்த மூவர் அணி!
மேற் சொன்ன இட்லர்… இடி அமீன் கூட அப்பாவிகள் மீது கார் ஏற்றிக் கொல்லும் அளவுக்குத் துணியவில்லை!
கார்ப்பொரேட்டுகளிடம் விவசாயிகளை அடிமையாக்கும் கொடூரத்தை கடுமையாக எதிர்த்து, கடந்த ஒரு வருட மாகப் போராடி வரும் விவசாயிகளை நசுக்கும் போக்கில் மோடி அரசும். உ. பி, அரியானா அரசும் இறங்கியிருக்கின்றன!
இதன் உச்சமாக, கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி, உ. பி. மாநிலம் லக்கிம்பூரில் மோடி அரசைக் கண்டித்து பேரணி சென்ற விவசாயிகள் மீது, தனது காரை வேகமாக மோதி நசுக்கி யிருக்கிறார் ஒரு பா. ஜ. க.. வி. ஐ. பி!
ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சரும்…. மோடி, அமித் ஷாவின் வார்ப்படமுமான அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா தான் அவர்!
அவரது கார் மோதியதில் அங்கேயே நான்கு அப்பாவி விவசாயிகள் மாண்டு போயினர்!
இதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு தான், மேற்படி அஜய் மிஸ்ரா, உ. பி. யில் ஒரு பொதுக் கூட்டத்தில், “இந்த விவசாயிகளின் போராட்டத்தை எப்படி அடக்குவது என்பது எனக்குத் தெரியும்” என்று கொக்கரித்தார்!
தந்தை சொன்னதை , அவர் மகன் ஆசிஷ் மிஸ்ரா செய்து காட்டி விட்டார்!
ஆனால், இவை எதுவுமே தெரியாதது போல் பிரதமரும் உள்துறை அமைச்சரும் கல்லு போல் இருக்கிறார்கள்!
அவர்களின் சீடரான உ. பி. முதல்வர் யோகியோ,”ஆதாரம் இல்லாமல் யாரையும் கைது செய்ய முடியாது” என்று ஆணவத்துடன் பேசி இருக்கிறார்!
இதனால் கொதிப்பு டைந்த உச்ச நீதி மன்றம், தானே இந்த வழக்கை விசாரித்து, “உ. பி. யில் நடந்த படுகொலைகளுக்குக் காரணமானவர் களைக் கைது செய்ய வேண்டும்” என்று எச்சரித்தது!
இதன் பின்னர் தான் இப்போது உ. பி. அரசு, அந்தக கொடூரன் ஆசிஷ் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து இருக்கிறது!!
நன்றி : ஓவியர் இரா. பாரி