ஸ்ரீஹரிகோட்டா:
ரே நேரத்தில் 20 செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி – சி34 ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்தது. இந்த நிலையில் இன்று 20 செயற்கைக்கோள்களை விண்ணில் ஒரே நேரத்தில் செலுத்தியதன் மூலம், இஸ்ரோ தனது சாதனையை தானே முறியடித்தது.
இந்த பிஎஸ்எல்வி – சி34 ராக்கெட்டில், இந்தியாவின் கார்டோசேட்-2 செயற்கைக்கோள் உள்ளிட்ட மூன்று செயற்கைகோள்கள் தவிர, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளின் 17 செயற்கைக்கோள்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த பி.எஸ்.எல்.வி. சி34 ராக்கெட்டானது நவீன மோட்டார் கருவி பொருத்தப்பட்ட எக்ஸ்எல் வகையில் 14ஆவது ராக்கெட் ஆகும். இதன் எடை 320 டன். உயரம் 44.4 மீட்டர் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
விண்ணில் ஏவப்பட்ட சில நிமிட நேரங்களில் 20 செயற்கை கோள்களும் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.