பெங்களூரு: கர்நாடக தலைநகரில் நடைபெற்றுவரும் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் ஒன்றையர் பிரிவில், மூன்றாவது சுற்றில் நுழைந்தார் இந்திய வீரர் குன்னேஸ்வரன்.
இன்று(பிப்ரவரி 12) நடைபெற்ற இரண்டாவது சுற்றில், ஜெர்மனியின் செபஸ்டியன் பேன்ஸேலோவுடன் மோதினார் குன்னேஸ்வரன்.
இதில், தொடக்கம் முதலே வேகம் காட்டிய குன்னேஸ்வரன், 6-2, 4-6 மற்றும் 6-4 என்ற செட்களில் ஜெர்மனி வீரரை வீழ்த்தினார் மற்றும் மூன்றாவது சுற்றுக்குள்ளும் நுழைந்தார்.
இரட்டையர் பிரிவில், காலிறுதிக்கு தகுதிபெறும் போட்டியில், இந்தியாவின் லியாண்டர் பயஸ் – ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டென் இணை, ஸ்லோவேனியாவின் பிளாஸ் ரோலா – சீனாவின் ஜிஜென் ஜங் இணையை எதிர்த்து, 7-6 மற்றும் 6-4 என்ற செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றது.