அங்காரா:
துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர்கள் யாரும் சிக்கி உள்ளனரா? என்று இந்திய தூதர் வீரேந்தர் பால் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், துருக்கியில் 3000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். நில நடுக்கம் பாதித்த பகுதிகளில் இருந்து பெரும்பாலானவர்கள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டனர். அவர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில், இந்தியர்கள் யாரும் சிக்கி கொண்டிருப்பதாக எந்த தகவலும் வெளியாகவிலை என்று கூறினார்.
Patrikai.com official YouTube Channel