கிறிஸ்ட்சர்ச்,
நியுசிலாந்தில் ஹோட்டல் மானேஜ்மென்ட் படித்து வந்த இந்திய இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடலை இந்தியா கொண்டுவர முயற்சி செய்யப்பட்டு வருகிறது.
மேற்படிப்புக்காக நியுசிலாந்து சென்ற ஹர்தீப் சிங் தியோல், கிறிஸ்ட்சர்ச் நகரில் படிப்புபோக மற்ற நேரத்தில் பார்ட் டைமாக வேலை செய்து வந்தார்.
இவர் அரியானா மாநிலத்தில் உள்ள சிர்சா மாவட்டத்தில் உள்ள ரானியா நகரை சேர்ந்தவர் . இவர் பஞ்சாபில் பிடெக் முடித்துவிட்டு, நியுசிலாந்தில் ஓட்டல் மேலாண்மை படிப்பு மேற்படிப்பு படித்து வந்தார்.
கடந்த 25ந்தேதி இவருக்கும், அங்குள்ள இளம்பெண் ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹர்தீப் சிங் கடுமையாக தாக்கப்பட்டார்.
இதில் பலத்த காயமடைந்த ஹர்தீப் சிங், உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதன் காரணமான அந்த பெண் கைது செய்யப்பட்டார். எதற்காக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது என்பது குறித்த தகவல் தெரியவில்லை. அவரை தாக்கிய பெண் பெயர் பிரான்செஸ்கா கொராரியா போரெல்.
இந்த பெண்ணை, ஹர்தீ்ப் சிங்கிற்கு இரு வாரங்களாக தெரியும் என அவரது நண்பர்கள் கூறி யுள்ளனர்.
இறந்துபோன ஹர்தீப் சிங் உடலை இந்தியா கொண்டு வர அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். க்க திட்டமிட்டுள்ளனர்.