வெலிங்டன்: நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி, 5 போட்டிகள் கொண்ட ஹாக்கித் தொடரில் 3-2 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி, 5 போட்டிகள் கொண்ட ஹாக்கித் தொடரில் பங்கேற்கிறது.
இதில், முதல் போட்டியில் நியூசிலாந்து டெவலப்மென்ட் அணியை வீழ்த்திய இந்தியா, அடுத்த 2 போட்டிகளில், சீனியர் நியூசிலாந்து அணியிடம் தோற்று அதிர்ச்சி அளித்தது.
பின்னர், நான்காவது போட்டியில் சுதாரித்து பிரிட்டனை வென்றது. இந்நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வென்றது இந்தியா.
இந்தியாவின் நவ்னீத் கவுர் 45வது மற்றும் 58வது நிமிடங்களில் 2 கோல்களையும், ஷர்மிளா தேவி 54வது நிமிடத்தில் ஒரு கோலையும் அடித்து வெற்றி தேடித் தந்தனர்.