இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னணி வீரரான சுசிலா சானு ஜெர்மனி அணியுடன் இன்று விளையாடும் போட்டி அவரது 200 வது சர்வதேச போட்டியாகும்.

எப்.ஐ.எச். லீக் ஹாக்கி தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 ல் வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி.

இன்று நடைபெறும் ஐந்தாவது போட்டியில் ஜெர்மனி-யை எதிர்கொள்கிறது.

இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள ஜெர்மனி அணி இரண்டிலும் தோல்வி அடைந்துள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்றைய போட்டி நடைபெறுகிறது.

2008 ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் சுசிலா சானு இன்று நடைபெறும் போட்டியில் பங்கேற்பதன் மூலம் இந்திய அணிக்காக 200 போட்டிகளில் விளையாடிய வீராங்கனை என்ற புதிய வரலாற்றை படைக்கிறார்.