மும்பை

ந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரமேஷ் பவார் பதவிக்காலம் 1 ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் செயல்பட்டு வருகிறார்.  தற்போது 44 வயதாகும் இவர் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். ரமேஷின் ஒரு ஆண்டு பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் இவரை மேலும் 1 ஆண்டிற்கு பயிற்சியாளராக நீட்டித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

இதுவரை இந்திய அணிக்காக ரமேஷ் பவார் 2 டெஸ்ட் மற்றும் 31 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார்.   இவர் ஏற்கனவே 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியப் பெண்கள் அணியின் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.  அதே ஆண்டு நவம்பர் மாதம் வெஸ்ட் இண்டீசில் நடந்த 20 ஓவர் பெண்கள் உலகக் கோப்பை போட்டி வரை அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது.

அப்போது மிதாலி ராஜ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ரமேஷ் பவாரின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை.  எனவே அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் டபிள்யூ.வி.ராமன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.  மீண்டும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரமேஷ் பவார் கடந்த ஆண்டு மிகவும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.  தற்போது இவரது பயிற்சி காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.