டோக்கியோ: ஜப்பான் தலைநகரில் நடைபெற்று ஒலிம்பிக் போட்டியில், இன்று நடைபெற்ற பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லாவ்லினாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது. இதன்மூலம் இந்தியா 3 பதக்கங்களை பெற்றுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகள் கடந்த ஜூலை 23ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. உலக நாடுகளைச் சேர்ந்த 11,000 மேற்பட்ட வீராங்கனைகள், வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்தியா சார்பில் 127 வீரர் வீராங்கனைகள் 18 போட்டிகளில் கலந்துகொண்டு ஆடி வருகின்றனர்.
இன்று நடைபெற்ற 69 கிலோ எடைப்பிரிவின் மகளிர் குத்துச்சண்டை அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா ,துருக்கி வீராங்கனை புஷானேஸ் கர்மெனஸியை எதிர்கொண்டார். இப்போட்டியில் 0-5 என்ற கணக்கில் லவ்லினா தோற்றதால், வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். உலகின் டாப் வீராங்கனையை இந்திய வீராங்கனை துணிச்சலாக எதிர்கொண்டு விளையாடினார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இதுவரை இந்தியா 3 வெண்கலப்ப பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.