புடாபெஸ்ட்: ஹங்கேரியில் நடைபெற்ற மோட்டார்ஸ்போர்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் பிரிவில் இந்தியாவின் வீராங்கணையான ஐஸ்வர்யா பிஸ்ஸே கலந்துகொண்டு FIM உலகக்கோப்பையை வென்றார்.

இந்தப் போட்டியில் உலகச் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்தியப் பெண் மற்றும் இந்தியர் இவர்தான். பெங்களூரைச் சேர்ந்தவர் இவர்.

உலகின் மோட்டார் சைக்கிள் பந்தயங்களை நிர்வகிக்கும் இண்டர்நேஷனல் மோட்டார் சைக்கிள் ஃபெடரஷேன் இந்தப் போட்டியை நடத்தியது.

துபாயில் நடந்தப் போட்டியில் 5வது இடத்தையும், போர்ச்சுகல் நாட்டில் நடந்தப் போட்டியில் 3வது இடத்தையும், ஸ்பெயினில் நடந்தப் போட்டியில் 5வது இடத்தையும், ஹங்கேரியில் நடந்தப் போட்டியில் 4வது இடத்தையும் பிடித்து, ஒட்டுமொத்தமாக 65 புள்ளிகளைப் பெற்று உலகச் சாம்பியன் பட்டம் வென்றார் ஐஸ்வர்யா.

சாம்பியன் பட்டத்திற்கான போட்டியில், போர்ச்சுகல் நாட்டின் ரிடா வியராவை விட மொத்தம் 4 புள்ளிகள் அதிகம் பெற்று சாதித்தார் இந்தியாவின் ஐஸ்வர்யா.