இஸ்லாமாபாத்,

ந்தியாவைச் சார்ந்த இளம் பெண் உஜ்மா என்பவர் பாகிஸ்தானியர் தாஹிர் அலி என்பவரை மலேசியாவில் சந்தித்துள்ளார். பின்னர் உஜ்மா டெல்லி திரும்பியுள்ளார். இருப்பினும் பாகிஸ்தானியருடன் தொடர்பில் இருந்துள்ளார்.

மலேசியாவிலிருந்து பாகிஸ்தான் வந்த தாஹிர் அலி, உஜ்மாவை அழைத்து பாகிஸ்தான் விசாவை கொடுத்து பாகிஸ்தானுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை வற்புறுத்தி திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் இந்தியப் பெண் உஜ்மா, மே இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் நான் எல்லையைத் தாண்டிய பிறகு மயக்கமடைந்ததாகவும், தாஹிர் அலி தன்னை துப்பாக்கி முனையில் மிரட்டி திருமணப்பதிவேட்டில் கையெழுத்துப் பெற்றதாகவும், அவர் என்னை வற்புறுத்தி திருமணம் செய்து பழைய வீட்டில் குடிவைத்து பாலியல் கொடுமை செய்ததாக தெரிவித்தார். மேலும், வரும் மே 30ம் தேதியுடன் தன் விசாக்காலம் முடிவடைவதால் தான் இந்தியாவிற்கு செல்ல அனுமதிக்கும்படி 6 பக்க மனுவை அளித்தார்.

உஜ்மாவின் மனுவை விசாரித்த நீதிபதி, அவரை இந்தியா செல்ல அனுமதி அளித்ததோடு அவர் வாகா எல்லைவரை பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்யுமாறு காவல்துறைக்கும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே நீதிமன்றத்தில் முறையிட்ட தாஹிர் அலி தன் மனைவி உஜ்மாவை தனியாக சந்திக்க பேச அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால் அந்த பெண் சந்திப்பை விரும்பவில்லை எனவே அவரது விருப்பத்திற்கு மாறாக அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தாஹிர் அலி ஏற்கனவே திருமணமானவர் என்றும் அவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளதாகவும் உஜ்மா தெரிவித்துள்ளார்.