வாஷிங்டன்

ந்திய வம்சாவளிப் பெண்ணான கீதா கோபிநாத் சர்வதேச நாணய நிதிய துணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வாஷிங்டனை தலைமையகமாகக் கொண்டு சர்வதேச நாணய நிதியம் (ஐ எம் எஃப்) செயல்பட்டு வருகிறது.  இதில் அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளிப் பெண்ணான கீதா கோபிநாத் தலைமை பொருளியல் வல்லுநராகச் செயல்பட்டு வருகிறார்.   கீதா கோபிநாத் கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தவர் ஆவார்.

தற்போது கீதா கோபிநாத் சர்வதேச நாணய நிதிய துணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.   அந்த பதவியில் தற்போதுள்ள ஜெப்ரி ஒஹமொடோவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடைய உள்ளதால் அந்த பதவிக்கு கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த நிதியத்தின் நிர்வாக இயக்குநராக கிறிஸ்டலினா ஜார்ஜியான் என்னும் பெண் செயல்பட்டு வருகிறார்.  இந்நிலையில் துணை நிர்வாக இயக்குநராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.  இவ்வாறு சர்வதேச நாணய நிதியத்தில் நிர்வாக இயக்குநர் மற்றும் துணை நிர்வாக இயக்குநராகப் பெண்கள் பணி ஆற்றுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.