லக்னோ: சர்வதேச கிரிக்கெட்டில், 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ்.

இவர், தென்னாப்பிரிக்க பெண்கள் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், 35 ரன்களை எடுத்திருந்தபோது இந்த சாதனையை செய்தார்.

இதுவரை, 10 டெஸ்ட் போட்டிகளில் 663 ரன்கள், 212 ஒருநாள் போட்டிகளில் 6974 ரன்கள், 89 டி20 போட்டிகளில் 2364 ரன்கள் என்று மொத்தமாக, 311 போட்டிகளில் சேர்த்து 10000 ரன்களை எட்டியுள்ளார்.

மேலும், இந்த சாதனையை செய்த உலகின் இரண்டாவது கிரிக்கெட் வீராங்கனை என்ற பெயரும் இவருக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் இங்கிலாந்து வீராங்கனை சார்லோட்டி எட்வர்ட்ஸ் 309 போட்டிகள் ஆடி, 10000 ரன்களைக் கடந்துள்ளார்.