துபாய்:

குவைத்தில் செயல் உதவியாளராக பணியாற்றி வருபவர் அனில் வர்கீஸ். 50 வயதாகும் இவர் கடந்த 20 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வருகிறார்.  லாட்டரி டிக்கெட் வாங்கிய இவருக்கு ரூ. 12 கோடிக்கு மேல் பரிசு விழுந்துள்ளது. இதற்கான குலுக்கல் அபுதாபி சர்வதேச விமானநிலையத்தில் நடந்தது.

8 ஜாக்பாட் பரிசுகளை வென்றவர்களில் 6 பேர் இந்தியர்கள். இதர வெற்றியாளர்கள் தலா 10 லட்சம் திர்காம் பரிசு வென்றுள்ளனர். இது குறித்து அனில் வர்கீஸ் கூறுகையில், ‘‘எனது மகன் பிறந்த தேதியுடன் நெருங்கி வரும் வகையிலான நம்பரை தேர்வு செய்தேன்.

அதற்கு தான் பரிசு விழுந்துள்ளது. இந்த டிக்கெட்டை ஆன்லைன் மூலம் வாங்கினேன். எனது மகன் பிறந்தநாள் 11/97. அதனால் 11197 என்ற நம்பரை வாங்கினேன். நான் பெரிய தொகையை வெற்றி பெற தற்போது 2வது முறையாக முயற்சி செய்தேன்’’ என்றார். இவரது மகன் கேரளாவில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.