டெல்லி:

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் புதிய விசா கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது இந்த நிலையில் மத்திய அரசு இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினருக்கான விசா கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்தியுள்ளது.

இதன் அடிப்படையில் ஒரு ஆண்டுக்கான சுற்றுலா விசா கட்டணம் 100 டாலரில் இருந்து (அதாவது ரூ. 6,449) 153 டாலராக (அதாவது ரூ.9,867) உயர்த்தப்பட்டுள்ளது. இதில் சில விலக்கு அளிக்கப்படுள்ளது. இந்தியா வரும் பிரிட்டன் மக்கள் ஒரு ஆண்டுக்கான சுற்றுலா விசாவிற்கு 162 டாலருக்கு பதில் (அதாவது ரூ.10,448), 248 டாலர் (அதாவது ரூ.15,994) செலுத்த வேண்டும்.

5 ஆண்டுகளுக்கான விசா கட்டணம் 484 டாலருக்கு பதில் (அதாவது ரூ.31,215), 741 டாலர் ( ரூ.47,790) செலுத்த வேண்டும். கனடா, அயர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தாய்லாந்து பயணிகள் வேலை வாய்ப்பு விசாவிற்கு 300 டாலருக்கு பதில் (அதாவது ரூ.19,348), 459 டாலர் (அதாவது ரூ.29,603) செலுத்த வேண்டும்.