ஆசிய விளையாட்டுப் போட்டியின் டீம் டிரஸ்சேஜ் போட்டியில் இந்தியா முதன்முறையாக தங்கப் பதக்கத்தை வென்றது.

அனுஷ் அகர்வாலா (எட்ரோ), ஹிருதய் விபுல் சேடா (செம்எக்ஸ்ப்ரோ எமரால்டு), திவ்யகிருதி சிங் (அட்ரீனாலின் ஃபிர்ஃபோட்) மற்றும் சுதிப்தி ஹஜெலா (சின்ஸ்கி) ஆகியோர் முதலிடத்தைப் பெற்றனர்.

ஹாங்சோவில் இன்று நடைபெற்ற போட்டியில் சீனா மற்றும் ஹாங்காங் அணிகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்தது.

41 ஆண்டுகளுக்குப் பிறகு குதிரையேற்றத்தில் இந்தியா தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சிறப்புமிக்க சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 1982 ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஆசியப் போட்டியில் இதுவரை மூன்று தங்கம் வென்றுள்ள இந்திய அணி மொத்தம் 14 பதக்கங்களை பெற்றுள்ளது.