ராஜ்கோட்:
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் 4வது ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று 2-2 என தொடரை சமன் செய்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 169 ரன்கள் எடுத்தது

தினேஷ் கார்த்திக் 27 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 55 ரன்கள் அடித்தார். ஹர்திக் பாண்ட்யா 46 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில் 170 என்ற இலக்கை நோக்கி தற்போது தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது. 8 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் எடுத்த நிலையில், 16.5 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்க அணியில் டூசன் அதிகபட்சமாக 20 ரன்களும், காக் 14 ரன்களும் அடித்தனர்.

எனவே இந்தியா 82 ரன் கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் அவேஸ் கான் 18 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இரு அணிகள் இடையேயான 5-வது டி-20 போட்டி நாளை இரவு ஏழு மணிக்கு பெங்களுரில் நடக்க உள்ளது.