கலிபோர்னியா:

மெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியை  சேர்ந்த மாணவர் ஒருவர் மர்ம நபரால் சுட்டுக்கொலப்பட்டார்.

கொல்லப்பட்ட இந்திய மாணவர் பெயர்  தரம்ப்ரீத் சிங் (வயது 21)  என்றும், வீட்டுக்கு தேவையான  பொருட்கள் வாங்க கடைக்கு  வந்தபோது, முகமூடி அணிந்த நபரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக இந்தியர்கள் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்படுவது அதிகரித்துள்ளது.