ஸ்ரீநகர்

காஷ்மீர் எல்லையில் இந்திய பாகிஸ்தான் ராணுவத்தினரிடையே தாக்குதல்கள் நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறைவிடப்பட்டுள்தாக மாநில அரசு தெரிவித்து உள்ளது.

இந்தியா பாகிஸ்தான் ராணுவத்தினரிடையே காஷ்மீல் மாநிலத்தில் தொடர்ந்து மோதல் வெடித்து வருகிறது. மேலும் பாகிஸ்தான் பயங்ரகவாதிகளும் காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவுக்கும் ஊடுருவியும் வருகிறார்கள். இதை முறியடிக்கும் பொருட்டு இந்திய ராணுவத்தினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறி தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதற்கு இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில்,  காஷ்மீர் மாநிலம்   ரஜோரி மாவட்டத்தின் எல்லை பகுதியில் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த எதிர்பாராத  தாக்குதல்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்தனர்.  மேலும் பலர் காயமடைந்தாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக ரஜோரி மாவட்டம் முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர். அங்குள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படலாம் என்ற நிலையில், அந்த பகுதிகளில் உள்ள  84 பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  3 தினங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]