மே.வங்காள மாநிலத்தில் இரு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
அந்த மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
அந்த கட்சியில் இருந்து ஏராளமானோர் விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.
திரினாமூல் காங்கிரஸ் – பா.ஜ.க. கூட்டணிக்கு மாற்றாக அந்த மாநிலத்தில் காங்கிரசும், இடதுசாரிகளும் சேர்ந்து மூன்றாவது அணியை அமைத்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த மாநிலத்தில் முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்கு படைத்த அப்பாஸ் சித்திக் என்பவர் ‘இந்திய மதச்சார்பற்ற முன்னணி’ என்ற கட்சியை அண்மையில் தொடங்கினார்.
இந்த கட்சி முதலில் ஒவைசியின் ஏ..ஐ.எம்.ஐ.எம். கட்சியுடன் கூட்டணி வைக்கும் என எதிர் பார்க்கப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்து போட்டியிட தீர்மானித்துள்ளது.
இந்த கட்சிகளிடையே நேற்று கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடந்துள்ளது.
– பா. பாரதி