புதுடெல்லி: இந்திய ஊரகப் பகுதிகளில், கொரோனா முடக்கத்தை முன்னிட்டு மிக மோசமான பொருளாதார சூழல் நிலவினாலும்கூட, பெரும்பாலான மக்கள் மோடி அரசுக்கு ஆதரவானவர்களாகவே இருக்கிறார்கள் என்று நாடு தழுவிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
அன்றாட குடும்பச் செலவிற்கே கடன் வாங்குதல், கூலி வேலைகள் கூட கிடைக்காமை, விவசாயிகள் தங்கள் அறுவடையை சரியான நேரத்தில், சரியான விலைக்கு விற்பனை செய்ய முடியாமை, பல குடும்பங்களின் வருவாய் வீழ்ச்சி, சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் ஐந்தில் ஒருவருக்கு மட்டுமே கிராமத்து கூலி வேலை கிடைத்தல் உள்ளிட்டவைதான் இன்றைய ஊரக இந்தியாவின் நிலைமை.
ஆனால், தங்கள் வாழ்க்கையில் இவ்வளவு அவலத்தை சந்தித்தும்கூட, சர்வேயில் கலந்துகொண்ட அந்த கிராமப்புற மக்களில் 74% பேர் மோடி அரசுக்கு ஆதரவான கருத்தையே தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா காலத்தில், மோடி அரசின் மோசமான செயல்பாடுகள் சிறப்பானவை என்றே அந்த மக்கள் நினைக்கிறார்கள்!
மொத்தம் 23 மாநிலங்களில், 25300 கிராமப்புற மக்கள் இந்த சர்வேயில் கலந்துகொண்டனர்.