டில்லி:

இந்திய ரெயில்வே துறையில் 20 ஆயிரம் புதிய பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது.

ரெயில்வே துறையில் தற்போது 90 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளது. இதில் தற்போது 20 ஆயிரம் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மொத்த காலிப் பணியிடம் 1.10 லட்சமாக அதிகரித்துள்ளது.

ரெயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) மற்றும் சிறப்பு பாதுகாப்பு படையில் (ஆர்பிஎஸ்எப்) 9 ஆயிரம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான விளம்பரம் வரும் மே மாதத்தில் வெளியிடப்படுகிறது. எல்1, எல்2 பிரிவுகளின் மேலும் 10 ஆயிரம் கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

பயணிகள் பாதுகாப்பு, ரெயில் தடம் புரளுவதை தடுத்தல். மின்மயம், புதிய தொழில்நுட்பம் மூலம் ரெயில்வேயை நவீனமயமாக்கல் போன்று பயணிகள் வசதியை மேம்படுத்தும் வகையில் ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இந்த புதிய முடிவை எடுத்துள்ளார்.