இந்திய ரயில்வே, முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் பயணத் தேதியை ஆன்லைனில் மாற்ற அனுமதிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இதற்கு எந்த கூடுதல் கட்டணமும் இல்லை.

இந்த திட்டம் ஜனவரி 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் NDTV-யிடம் தெரிவித்துள்ளார்.

தற்போது பயணத் தேதியை மாற்ற விரும்பினால், டிக்கெட்டை ரத்து செய்து புதிதாக டிக்கெட் வாங்க வேண்டும். இதனால் ரத்து கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். புதிய முறையால் அந்த சிரமம் நீங்கும்.

அதே நேரத்தில், புதிய தேதியில் இருக்கை கிடைக்கும் என்று உறுதியாகக் கூறமுடியாது, தவிர புதிய தேதியில் டிக்கெட் விலை அதிகமாக இருந்தால், அந்த விலை வித்தியாசத்தை பயணிகள் செலுத்த வேண்டும்.

இந்த புதிய வசதி மூலம், ரயில் பயணங்களை மாற்ற விரும்பும் லட்சக்கணக்கான பயணிகள் பணம் மற்றும் நேரம் மிச்சமாகும் என்று கூறப்படுகிறது.