டெல்லி:  இஸ்லாமிய அச்சுறுத்தல் செய்திகளை ட்விட்டரில் வெளியிட்டதற்காக சவூதி அரேபியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் இந்திய பேராசிரியரை பணி நீக்கம் செய்துள்ளது.
சவூதி அரேபியாவில் ஜஜான் பல்கலைக்கழகத்தில் அந்த பேராசிரியர் பணியாற்றினார். அவரது பெயர் நீரஜ் பேடி என்பதாகும். முஸ்லிம்களுக்கு எதிராக ஆன்லைனில் மோசடி பிரச்சாரத்தை மேற்கொண்டார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டாகும்.
பல்கலைக்கழக விதிமுறைகளை மீறி முஸ்லிம்களுக்கு எதிராக வகுப்புவாத கருத்துக்களை தெரிவித்திருந்தார். சமூக வலைதளங்களில் வெறுக்கத்தக்க செய்திகளை பதிவிடும் மக்கள் மீது வளைகுடா நாடுகள் ஒடுக்குமுறையை தொடங்கியுள்ள நேரத்தில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அவரைப் போலவே, இந்தியாவிலிருந்து பல வெளிநாட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். இது குறித்து ஜஜான் பல்கலைக்கழகம் கூறி இருப்பதாவது:
அவரது டுவீட் பதிவுகள் பற்றி கண்காணிக்கப்பட்டது. அவரது கருத்துகள் மதம் பற்றி மோசமான கருத்துகளை பொதிந்து இருந்தாகவும், தீவிரவாத கருத்துகளை ஆதரிப்பதாகவும் இருந்து என்று தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு பிறகு, பதவி நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியரை சிலர் நீரஜ் பேடி என்று அடையாளம் கண்டுள்ளனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் அவரது வெறுக்கத்தக்க ட்வீட்களின் ஸ்கிரீன் ஷாட்களாக வெளியிட்டனர். அந்த பதிவுகளின் அடிப்படையில் பேடி, முஸ்லிம்கள் கொரோனா வைரஸை பரப்பியதாக குற்றம் சாட்டியிருந்தார்.