பெங்களூரு: பிரதமர் மோடி இன்று பெங்களூருவில், வந்தேபாரத், கவுரவ் காசி தர்ஷன் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார். தென் இந்தியாவின் முதல் “வந்தே பாரத் ரயில்” (சென்னை- மைசூரு) தொடக்க விழா பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் பொம்மை உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வந்தே பாரத் எனப்படும் அதிநவீன வசதிகள்கொண்ட, விரைவு ரயில் சென்னை மைசூரு இடையே இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாட்டின் 5வது வழித்தடமாகும். இந்த ரயில சேவையை இன்று பிரதமர் மோடி பெங்களூருவில் கொயசைத்து தொடங்கி வைத்தார்.  வாரத்தில் 6 நாட்களுக்கு சென்னை – மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. 6 மணி 30 நிமிடங்களில் சென்னையில் இருந்து மைசூரு செல்ல முடியும்.

அத்துடன் பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் பாரத் கௌரவ் காசி தர்ஷனா ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை – மைசூரு ‘வந்தே பாரத்’ ரயில் சேவை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…