கோவை: ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், அதை வைத்து சூதாடிய 7 பேர் கொண்ட கும்பல் கோவை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். எ அவர்களிடம் இருந்து ரூ.1.09 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் திருவிழா நடைபெற்று வருகிறது. 18-ஆவது ஐபிஎல் தொடர் மாா்ச் 22 அன்று முதல் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன்காடன் மைதானத்தில் நடைபெற்றது தொர்ந்து இதுவரை 25 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
இந்த நிலையில், இந்த ஐபிஎல் போட்டியை வைத்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சூதாட்டங்களும் கொடிகட்டி பறக்கிறது. ஏற்கனவே ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் புரோக்கர்கள் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படும் பல்வேறு முறைகேடுகளும் நடைபெற்று வருவதாக சமுக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், கோவையில் ஐபிஎல் போட்டிகளை வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக மாவட்ட காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் பகுதியில் நோட்டமிட்ட காவல்துறையினருக்கு அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலரது நடவடிக்கைகள் இருப்பது தெரிவந்தது. இதனையடுத்து அங்கு விரைந்த காட்டூர் போலீசார் , அவர்களை மடக்கி விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்த நிலையில், அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், அங்கு சூதாட்டம் நடைபெற்று வருவது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்டபோது லேப்டாப் மற்றும் செல்போன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஒரு கோடியே 9 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பணம் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அந்த இளைஞர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக, அங்கிருந்த 7 இளைஞர்களை சுற்றிவளைத்து பிடித்த போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று மேலும் விசாரணை நடத்தி வருகின்ற னர்.
ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கும்பலிடம் இருந்து, ரூ.1.09 கோடி ரொக்க பணம், 2 கார்கள், 2 பைக்குகள், 12 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.