2024 ம் ஆண்டு சந்திரனில் தரையிறங்கும் நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் சந்திரனில் கால்பதிக்க இருக்கும் 18 பேர் கொண்ட குழுவில் இந்திய வம்சாவழியை சேர்ந்த ராஜா ஜான் வர்புதூர் சாரி-யும் ஒருவர்.
1977, ஜூன் 24 அன்று விஸ்கான்சின் மாகாணத்தின் மில்வாக்கியில் பிறந்த ராஜா சாரி-யின் தந்தை ஸ்ரீனிவாஸ் வி சாரி ஹைதராபாதில் பிறந்து அமெரிக்காவில் பட்டம் பெற்றவர்.
ராஜா சாரி, 1999 ஆம் ஆண்டு, யு.எஸ். ஏர் ஃபோர்ஸ் அகாடமியிலிருந்து விண்வெளி பொறியியல் மற்றும் பொறியியல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர்.
இவரது தந்தை ஹைதராபாதில் பிறந்தவரானாலும் அவர் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலவில் கால் பாதிக்க இருக்கும் இந்த அமெரிக்க தமிழர் இடம் பெற்றிருக்கும் 18 பேர் கொண்ட குழுவில், 9 பேர் பெண்கள் என்பதும், நிலவில் கால்பதிக்க இருக்கும் முதல் பெண் இந்த குழுவை சார்ந்தவராக இருக்கும் என்பது கூடுதல் தகவல்.