சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இன்றையப் போட்டியில் வென்றால், இந்திய அணி தொடரை வெல்ல முடியும்.

இந்திய அணியில், கடந்தப் போட்டியில் சோபிக்காத மணிஷ் பாண்டே நீக்கப்பட்டு, ஷ்ரேயாஸ் உள்ளே கொண்டுவரப்பட்டுள்ளார். ஆனால், அவர் இந்தப் போட்டியிலாவது ஷ்ரேயாஸ் உருப்படியாக ஆடுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மற்றபடி, எதிர்பார்த்ததைப் போலவே, ஜடேஜாவிற்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் இடம்பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியில், கேப்டன் ஆரோன் பின்ச் இடம்பெறவில்லை. அவருக்கு பதில், மேத்யூ வேட் கேப்டனாக களமிறங்கியுள்ளார். பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கிற்கு பதில் டேனியல் சாம்ஸ் களமிறங்கியுள்ளார்.