டெல்லி: ஈரான் அமெரிக்காஇஸ்ரேல் போர் காரணமாக உலக நாடுகளிடையே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்நதுள்ள நிலையில், இந்தியாவிலும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
ஏற்கனவே சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டும், வணிக எரிவாயு சப்ளை நிறுத்தப்பட்டும் உள்ள நிலையில், இன்று நாடு முழுவதும் பிரிமியல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை 100.83 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 102.18 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஈரான் போர் சூழலால் கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இன்று முதல், BPCL ‘ஸ்பீட்’, HPCL ‘பவர்’ மற்றும் IOCL-ன் ‘XP95’ போன்ற ப்ரீமியம் பெட்ரோல்களின் விலை லிட்டருக்கு ரூ.2.09 உயர்த்தப்பட்டுள்ளது.
முன்னர் ஒரு லிட்டர் 111.68 ரூபாயாக இருந்த ப்ரீமியம் பெட்ரோலின் விலை, தற்போது ஒரு லிட்டருக்கு 113.77 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 103.92 ரூபாயாகவும், புனேவில் ஒரு லிட்டர் ப்ரீமியம் பெட்ரோல் 113.17 ரூபாயாகவும், தமிழ்நாட்டில் ரூ.102,18 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களின் மூன்றாவது வாரம் இது. இந்தப் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறிவந்தாலும், தற்போதைய நிலைமை அதற்கு மாறாகவே உள்ளது. ஈரானின் உயர்மட்டத் தளபதிகள் கொல்லப்பட்ட போதிலும், தெஹ்ரானின் பதிலடித் தாக்குதல்கள், இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வராது என்பதை தெளிவுபடுத்துகின்றன.
இதன் காரணமாக கச்சா எண்ணை எடுத்துச்செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், இந்திய ரூபாய் கணிசமான சரிவைச் சந்தித்து வருகிறது. மார்ச் 20ந்தேதி அன்று, அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு முதல் முறையாக 93-க்கும் கீழே சரிந்தது. இது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தை அரசாங்கத்தின் மீது மேலும் அதிகரித்துள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், பிரிமியம் பெட்ரோலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பல நாடுகளில் எரிபொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவிலும் உயர்த்தப்பட்டு வருகிறது. , இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தள்ளனர்.
[youtube-feed feed=1]