டில்லி:
பெட்ரோல், டீசல் விலை இன்று 1 பைசா மட்டுமே குறைந்துள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 16 நாட்களாக வரலாறு காணாத அளவுக்க உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை இன்று 60 பைசா குறைந்ததாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து பத்திரிகை.காம் இணையதளத்திலும் செய்தி வெளியானது.
ஆனால் அநத செய்தி தவறானது என்றும், கணக்கிடுவதில் ஏற்பட்ட கோளாறு காரணம் என்று தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஏற்கனவே வெளியான தகவல் தவறு என்றும், கணக்கிடுவதில் ஏற்பட்ட தவறு காரணமாக 60 பைசா குறைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை இன்று 1 பைசா மட்டுமே குறைந்துள்ளது என்று தெளிவுபடுத்தி உள்ளது.