மும்பை: மும்பையில் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படை ஹெலிகாப்டர் திடீர் விபத்துக்குள்ளானது. அதில் இருந்த பைலட்கள் மீட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கடற்கரை  பகுதியில், கடற்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள், ரோந்துபடகுகள், கடற்கரை பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த நிலையில், இன்று காலை வழக்கமான  ரோந்து பணியியில் ஈடுபட்டு வந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் திடீர் பழுது ஏற்பட்டது. இதையடுத்து, அந்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது சிறு விபத்துக்குள்ளனது.

இந்த  விபத்துக்குள்ளான  ஹெலிகாப்டரில்  பைலட் உள்பட  3  பணியாளர்களும் உடனடியாக கடற்படை ரோந்துக் கப்பல் மூலம் மீட்கப்பட்டதாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக கடற்படை தகவல் அளித்துள்ளது.