சென்னை,
மத்திய அமைச்சரின் பேச்சுக்கு இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழக தலைவர் அப்துல் ரகீம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்து அமைப்பினர் மீது தாக்குதல் தொடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கை வெளியிடுவது ஜனநாயக மரபு .
இந்து அமைப்பினர் தாக்குதல் நீடித்தால் தமிழகம் கலவர பூமியாக மாறும் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் அறிக்கை வெளியிட்டது இந்திய ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது.
மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தனது பொறுப்பற்ற பேச்சை வாபஸ் பெற வேண்டும்.
சமீப காலமாக சமூக வளைய தளங்கள் உட்பட பொதுக் கூட்ட மேடைகளில் தமிழ் நாட்டில் குஜராத் போல மாற்றுவோம் , குஜராத் போல முஸ்லிம்களை கொலை செய்வோம் என 2002 குஜராத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான காட்டு மிராண்டி தன தாக்குதல் சம்பவத்தை மேற்கோள் காட்டி ஆர் எஸ் எஸ் பிஜேபி சங்பரிவார பாசிச கூட்டம் தமிழக முஸ்லிம்களை மிரட்டி வருகிறது.
காவல்துறையில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்து அமைப்பினர் மீது தாக்குதல் தொடுத்தால் தமிழகம் கலவர பூமியாக மாறும் என தனது பொறுப்பற்ற பேச்சின் மூலம் நேரடியாக தமிழக முஸ்லிம்களை மிரட்டி உள்ளார்
மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களின் மிரட்டல் பேச்சு இந்திய தேசிய லீக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது
அதே நேரத்தில் தொடர்ந்து இதே போன்ற மிரட்டல்கள் ஆர் எஸ் எஸ் பிஜேபி சங்பரிவார அமைப்புகள் மூலம் தொடர்ந்தால் தமிழ் நாட்டில் மீண்டும் தொடர்ந்தால் அகில இந்திய ஜிஹாத் கமிட்டி உருவாகும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக எச்சரிக்கை விடுகிறோம்” என்று இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழக தலைவர் தடா ஜெ அப்துல் ரஹிம் தெரிவித்துள்ளார்.