ம்ரித்சர்

பாகிஸ்தான் எல்லையில் மிகுந்த வரவேற்புடன் பறக்க விடப்பட்ட இந்திய கொடி காற்றில் பாழானதால் எடுத்துச் செல்லப்பட்டது, இன்றுவரை பறக்க விடப்படாதது மக்கள் மனதில் சங்கடத்தை உண்டாக்கி உள்ளது

பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் 360 அடி உயரத்தில் இந்தியக் கொடி ஒன்று பறக்க விடப்பட்டது.  இங்கு உயரம் காரணமாக பலத்த காற்று வீசுவது வழக்கம்.  அப்படி வீசிய காற்றினால் கடந்த ஏப்ரல் மாதம் பாழடைந்தது.  அதை மாற்றுவதற்காக அமிரித்சர் அரசு நிர்வாகத்தினரால் எடுத்துச் செல்லப்பட்டது.  இன்று வரை அந்தக் கொடி மாற்றித் தரப்படாததால் கொடி பறக்கவிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

காற்றில் கிழிந்து பாழாகாத வண்னம் கொடியை அமைப்பதற்கு பஞ்சாப் அரசு திணறி வருகிறது.  இது வரை மூன்று முறை அந்தக் கொடி கிழிந்து பாழாகி உள்ளது.

இதே போல் அம்ரித்சரில் உள்ள ரஞ்ஜித் அவென்யூவில் 170 அடி உயரத்தில் பறக்க விடப்பட்ட கொடியும் 13 முறை காற்றினால் பாழானது.  சுதந்திர தினத்தன்று ஏற்றப்படும் என அற்விக்கப் பட்டுள்ளது.  ஆனால் இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் காற்றில் கிழியா வண்ணம் இந்தக் கொடிகளை உருவாக்குவதில் அரசுக்கு எந்த ஒரு உக்தியும் தென்படவில்லை.   ஒருவேளை சுதந்திர தினத்தன்று ஏற்றியதும் வேகமாக காற்று அடித்தால் உடனடியாக இறக்கப் பட வேண்டும்.

இது பெருமைக்குரிய கொடியை சங்கடத்துக்குள்ளாகும் கொடியாக ஆக்கிவிடுகிறது என டெபுடி கமிஷனர் கமல்தீப் சிங் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்,

பாராளுமன்ற உறுப்பினர் அவுஜ்லா, “இது குறித்து நான் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவிடம் பேசி உள்ளேன்.  அவர் இதற்கு ஒரு தீர்வு காண்பார் என நம்புகிறேன்.  கொடியை காற்றில் கிழியாத வண்ணம் உருவாக்குவதுடன், கொடிக்கம்பத்தின் உயரத்தையும் குறைப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.  இந்த உயரம் குறைப்பது பற்றி மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

இதுவரை ரஞ்ஜித் அவென்யூவில் உள்ள கொடியை சரிசெய்ய மற்றும் மாற்ற ரூ. 9 லட்சமும் எல்லையில் ரூ. 6 லட்சமும் செலவிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.