டில்லி குண்டுவெடிப்பு பயங்கரவாதி அரிஸ்கான் கைது!

Must read

டில்லி:

லைநகர் டில்லியில் ஏற்கனவே நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த முக்கிய பயங்கரவாதி இன்று கைது செய்யப்பட்டான்.

டில்லியில் நடைபெற்ற 5 குண்டு வெடிப்பு சம்பவங்களில் இவனது தொடர்ப்பு இருப்பதை கண்டுபிடித்த போலீசார், அவனை பிடிக்க வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியான  அரிஜ் கான்  டில்லி போலீசாரால் இன்று காலை செய்துப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 2008ம் ஆண்டு இவனை கைது செய்ய முயன்றபோது, டில்லி ஜாமியா நகரில் நடைபெற்ற இரு தரப்பினருக்கு மான  துப்பாக்கி சூட்டின்போது, இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகளும், மோகன் சர்மா என்ற காவல் ஆய்வாளரும் உயிரிழந்தனர். அப்போது, பயங்கரவாதி அரிஸ் கான் அங்கிருந்து தப்பிவிட்டான்.

இந்நிலையில், சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவனை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

More articles

Latest article