பாகிஸ்தான் அமைச்சர் கூட்டத்தில் இந்திய பத்திரிகையாளருக்கு அனுமதி மறுப்பு

Must read

ண்டன்

நேற்று லண்டன் பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் அமைச்சர் ஷா முகமது குரேஷி பேசிய கூட்டத்தில் இந்திய பத்திரிகையாளர்களை அனுமதிக்க மறுக்கப்பட்டுள்ளது

.

இங்கிலாந்து தலைநகர் லண்டன் பாராளுமன்றத்தில் மக்களவையில் காஷ்மீர் குறித்து ஒரு கருத்தரங்கம் நடந்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்த கட்சிகள் இந்த கருத்தரங்கத்தை நடத்தின. இது ஒரு பொதுவான நிகழ்வு எனினும் அனைவரையும் நிகழ்வில் அனுமதிக்கவில்லை. இந்த விழாவில் பாகிஸ்தான் சார்பில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி கலந்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் வம்சாவழியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரிட்டிஷ் சீக்கியர்கள் கட்சியை சேர்ந்த தான் தேசி, உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இந்திய வம்சாவழி பாராளுமன்ற உறுப்பினர்கள்சிலரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளனர். ஆயினும் இந்த நிகழ்வுக்கு இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஷா முகமது குரேஷி லண்டன் பாராளுமன்றத்தில் இத்தகைய ஒரு கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு இங்கிலாந்து அரசு, “குரேஷி அரசு முறை விருந்தினர் இல்லை. அவரை பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைத்துள்ளனர். இந்நாட்டு சட்டத்தின் படி அரசாங்க விருந்தினரை மட்டுமே அரசு கட்டுப்படுத்த முடியும்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து ஒரு தீர்வு காண வேண்டும் என்பதில் இங்கிலாந்து அரசு உறுதியாக உள்ளது. பாகிஸ்தானுக்கு எப்போதும் இங்கிலாந்து இந்த விவகாரத்தில் ஆதரவு அளித்ததில்லை. இந்த கூட்டம் குறித்த எதிலும் அரசுக்கு சம்பந்தம் இல்லை. தனிப்பட்ட உறுப்பினர்களின் விருப்பப்படி கூட்டம் நடந்துள்ளது” என தெரிவித்துள்ளது.

More articles

Latest article