மாநில வனத்துறைகளுடன் இணைந்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், இந்தியாவில் உள்ள சிறுத்தைகள் எண்ணிக்கையை கணக்கிட்டது.
இது தொடர்பான அறிக்கை “இந்தியாவில் 2018-ம் ஆண்டு சிறுத்தைகள் நிலை” என்ற பெயரில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் :
இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு 7 ஆயிரத்து 910 சிறுத்தைகள் இருந்தன.
நான்கு ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2018 ஆண்டில் இந்தியாவில் 12 ஆயிரத்து 852 சிறுத்தைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலத்தில் அதிக பட்சமாக 3 ஆயிரத்து 421 சிறுத்தைகள் உள்ளன.
தமிழ்நட்டில் உள்ள சிறுத்தைகள் எண்ணிக்கை – 868.
வனப்பகுதியில் உள்ள சிறுத்தைகள் மட்டுமே இந்த கணக்கெடுப்பில் எண்ணப்பட்டுள்ளன.
காபி மற்றும் தேயிலை தோட்டங்களில் வாழும் சிறுத்தைகள் இதில் சேர்க்கப்படவில்லை.
– பா. பாரதி