பிரிட்டோரியா: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளார் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. இவர் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் மத்திய வடகிழக்குப் போட்டியில் கலந்துகொண்ட இவர், 87.86 மீ தூரம் வீசியதால், டோக்கியோ ஒலிம்பிக்கிற்குள் நுழைந்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு இவருக்கு காயம் ஏற்பட்டதால் ஓய்வில் இருந்தார். தற்போது காயத்திலிருந்து மீண்டும், சிறப்பாக செயல்பட்டு ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “காயத்திலிருந்து மீண்டுவந்து பங்கேற்ற முதல் போட்டியில் நன்றாக செயல்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. முதல் மூன்றுமுறை எறிந்தபோது 80 மீ தூரத்திற்கு மேல் சென்றது.
இதனால், நான்காவது வாய்ப்பில் வேகத்தை இன்னும் அதிகரித்தேன். இந்த வெற்றியின் மூலம் எதிர்வரும் சீசன் நன்றாக அமையும் என்று நம்புகிறேன்” என்றார்.