சென்னை

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் முதல் முறையாக ஒரு இந்திய நரி காணப்பட்டது.

கடந்த வாரம் செனனை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள பறவை ஆர்வலர்கள் ஒரு இந்திய குள்ளநரியை கண்டுள்ள்ணெனர்,  ஈரநிலத்தின் மையப் பகுதிகளில் இந்த இனத்தை முதன்முதலில் பார்க்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட வன அதிகாரி வி.ஏ. சரவணன் இவ்வாறு கண்டதை  உறுதிப்படுத்தி உள்ள்ர், குள்ளநரிகள் மனித குடியிருப்புகளுடன் நன்கு தகவமைத்துக் கொண்டு இணைந்து வாழும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே வனவிலங்கு நிபுணர்கள் சென்னையின் பல பகுதிகளில், தியோசாபிகல் சொசைட்டிக்குப் பின்னால் உள்ள தீவுகள், ப்ளூ கிராஸ் சாலை, பெசன்ட் நகர், கிண்டி தேசிய பூங்கா மற்றும் நன்மங்கலம் ரிசர்வ் காடு உள்ளிட்ட இடங்களில் நரிகளைக் கண்டுள்ளனர். இ

பல ஆண்டுகளாக சதுப்பு நிலத்தின் விலங்கினங்களை கண்காணித்து வரும் பாதுகாவலர் கே.வி.ஆர்.கே. திருநாரணன், “இது பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதற்கான ஒரு நேர்மறையான அறிகுறியாகும்” என்றார். இங்கு நரிகள் இருப்பதற்கு பங்களிக்கும் மற்றொரு முக்கிய காரணி ஏராளமான உணவு. சதுப்பு நிலம் மீன் மற்றும் நண்டுகள் உட்பட ஏராளமான இரையை வழங்குகிறது. குறிப்பாக, நரிகள் ஒரு ஆக்கிரமிப்பு இனமான ஆப்பிரிக்க கெளுத்தி மீனை உண்பது கவனிக்கப்படுகிறது.

நகர்ப்புற வனவிலங்குகளுக்கான சரணாலயமாக சதுப்பு நிலம் வளர்ந்து வருவதை நரிகளின் வருகை உறுதி  செய்துள்ளது.

 

இந்திய நரி, சென்னை பள்ளிக்கரணை, சதுப்பு நிலம், Indian-jackal, Chennai-Oallikkaranai-marsh-land

[youtube-feed feed=1]