இந்தியா – ஆஸ்திரேலியா இடையே இன்று நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி லீக் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்றது.
1972 முனிச் ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு, 52 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் குரூப் பி பிரிவில் 2வது இடத்தில் இந்திய அணி உள்ளது.
இந்திய அணி குரூப் ஏ பிரிவில் மூன்றாவது இடம் பிடிக்கும் அணியுடன் காலிறுதியில் மோதவுள்ளது.
ஜெர்மனி மற்றும் பிரிட்டன் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் இந்திய அணி மோதுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
பெல்ஜியம் அணிக்கு எதிரான போட்டியில் அர்ஜென்டினா அணி 2 அல்லது அதற்கும் மேலான கோல் அடித்து வெற்றிபெற்றால் குரூப் ஏ தரவரிசை பட்டியலில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து வேறு அணிகளுடன் இந்திய அணி மோதவும் வாய்ப்பு இருக்கிறது.