ஜலந்தர்: இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங்கின் திருமணம் நேற்று ஜலந்தரில் நடைபெற்றது. மணப்பெண், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இல்லி சித்திக்.

தற்போது 28 வயதாகும் மன்பிரீத் சிங், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்தவர். கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக பொறுப்பு வகிக்கிறார்.

கடந்த 2013ம் ஆண்டு, மலேசியாவில் நடைபெற்ற சுல்தான் ஜோகர் கோப்பை தொடரில் பங்கேற்றபோது, இல்லி சித்திக்கை முதன்முறையாக சந்தித்தார். அப்போது முதல் இருவரும் காதலிக்கத் தொடங்கினர்.

அவர்களின் காதல் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்தது. இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக திருமணம் செய்துகொள்ளலாம் என்று இருவரும் முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், மணமகனின் சொந்த ஊரிலேயே திருமணம் நடைபெற்றது. இந்த ஜோடிக்கு, பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.