டெல்லி: ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவ வெளியுறவுத் துறை அமைச்சகம் கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளது. மேலும் அவர்களுக்கு உதவ அவசர உதவி எண்களையும் வெளியிட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் போர் மூளும் நிலையில் இந்தியா சிறப்பு கட்டுப்பாட்டு அறையை அமைத்து – ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டு உள்ளது. பிராந்தியத்தில் உள்ள இந்திய பிரஜைகளுக்கு சரியான நேரத்தில் உதவி வழங்குவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஈரான், மீது அமெரிக்கா இஸ்ரேல் நாடுகள் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரான் அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ள வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. குவைத், சவூதி உள்பட பல நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை மட்டுமின்றி, பொதுமக்கள் பகுதிகள், முக்கியமான எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளையும் இலக்காகக் கொண்டு ஈரான் தாக்கியுள்ளது.
இதன்மூலம், பயணம், சுற்றுலா, வணிகம் ஆகியவற்றுக்குப் பாதுகாப்பான, வளமான பகுதி என்ற வளைகுடா பிராந்தியத்தின் நற்பெயரை இரான் சேதப்படுத்துகிறது. இது இந்த நாடுகளுக்கு மிகவும் முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு துறையையும் கடுமையாகப் பாதித்துள்ளது.
இந்த நிலையில், வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதுடன், மத்திய கிழக்கு நாடுகளின் நிலவரத்தை தீவிரமாக கண்காணிக்கும் வெளியுறவுத்துறை அமைச்சகம், நாட்டு நலனுக்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளின் அரசுகளுடனும் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது. அவர்கள் குறித்து தகவல் பெற கட்டுப்பாட்டு மையங்களையும் திறந்துள்ளது.
டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டுப்பாட்டு மையம், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிப்பவர்கள் 1800118797, 91 11 23012113, 91 1123014104, 91 1123017905 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.‘ என அறிவிக்கப்பட்டு உள்ளது.
- 1800118797 (Toll Free)
- +91 11 2301 2113
- +91 11 2301 4104
- +91 11 2301 7905
Emergency contact numbers of Indian embassies in the region are as follows:
- Bahrain: +973 39418071
- Iran: +98 9128109115 / +98 912810910 / +98 912810910 / +98 932179359
- Iraq: +964 771 651 1185 / +964 770444 4899
- Israel: +972 54 7520711 / +972 54 2428378
- Jordan: +962 770 422 276
- Kuwait: +965 65501946
- Lebanon: +961 76860128
- Oman: +968 98282270 (WhatsApp) / 80071234 (Toll free)
- Qatar: +974 55647502
- Ramallah, Palestine: +970 592916418
- Saudi Arabia (Riyadh): +966 11 4884697 / 800 247 1234 (Toll free)
- Saudi Arabia (Jeddah): +966 126648660 / +966 12 2614093
- United Arab Emirates: +971 543090571 (WhatsApp) / 800 46342 (Toll free)