டில்லி

சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி ஒப்புதலுக்கு அளித்த விண்ணப்பங்களை இந்திய அரசு நிராகரித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி கண்டறியும் பணியில் பல உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.   ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் மேலும் மற்றொரு நிறுவனமான பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் ஒப்புதலுக்கு இந்திய அரசுக்கு விண்ணப்பித்திருந்தன.

தற்போது உலக அளவில் கொரோனா  பாதிப்பில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளதால் உடனடியாக் கொரோனா தடுப்பூசியின் தேவை உள்ளது.   இதையொட்டி இந்நிறுவனங்கள் அவசர பயன்பாட்டுக்கான ஒப்புதலை கோரி உள்ளன.  இந்த விண்ணப்பங்களை மத்திய அரசின் மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் பரிசீலித்து வந்தது.

தற்போது வெளியான தகவலின்படி சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய இரு நிறுவனங்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.  இதற்கு இந்த மருந்துகளில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாகவும்  மருந்துகளின் திறன் பற்றிய விவரங்கள் போதுமானதாக இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.