சாச்வால்

ந்திய அரசு பாகிஸ்தான் எல்லையில் மக்கள் குண்டு வெடிப்பின் போது ஒளிந்துக் கொள்ள 14000 பதுங்கு குழிகள் அமைத்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள சிற்றூர் சாச்வால் ஆகும்.       சாச்வால் எல்லைப் பகுதியில் அடிக்கடி இரு நாட்டு ராணுவத்தினர் இடையில் துப்பாக்கி சண்டை நிகழ்வது வழக்கமாகும்.  தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் நடந்த விமான தாக்குதல் காரணமாக நாடெங்கும் போர் அபாயம் மூண்டுள்ளது.

எல்லைப் பகுதி மக்கள் இதனால் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.   போர் அபாயம் இருப்பதால் தங்களை ராணுவத்தினர் வேறு ஊர்களுக்கு மாற்றக்கூடும் என நம்பி வந்தனர்.   ஆனால் இந்திய அரசு இவர்கள் பாதுகாப்புக்காக 14000 பதுங்கு குழிகள் அமைத்துள்ளன.   பதுங்கு குழிகள் என்பது விமானப்படை குண்டு வீசும் போது உள்ளே சென்று ஒளிந்துக் கொள்ளும் இடமாகும்.

இதற்கு அந்த சிற்றூர் வாசிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   அந்த ஊரை சேர்ந்த 75 வயதான தனாத்தர் சிங், “இந்த சிற்றூர் வாசிகளுக்கு போர் அபாயம் அடிக்கடி ஏற்படுகிறது.  கடந்த 2002 ஆம் ஆண்டு எனது மகள் என் வீட்டுக்கு அருகிலேயே குண்டடி பட்டு இறந்து போனார்.   எல்லைப் புற மக்களின் அமைதியை கருத்தில் கொள்ளாமல் அரசு பதுங்கு குழி அமைப்பது கண்டனத்துக்குரியது” என த்ர்வித்தார்.

இந்த பதுங்கு குழிகள் அமைக்கும் பணிகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளன.  வழக்கமான வீடுகளின் சுவ்ர்களை போல் மூன்று மடங்கு அகலமான சுவர்களுடன் இந்த குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.   கூறைகளும் வழக்கத்தை விட 10 மடங்கு இரும்பு கம்பிகள் கொண்டு உருவாக்கபட்டுள்ளன.

இதை உருவாக்கி உள்ள பொறியாளர் ஒருவர் இந்த பதுங்கு குழிகளில் ஒளிந்துக் கொண்டால் வலுவான குண்டுகளாலும் அபாயம் ஏற்படாது என தெரிவித்துள்ளார்   ஆயினும் இங்குள்ள மக்கள் அமைதிக்கான தீர்வு காணாமல் பதுங்கு குழிகள் அமைப்பது தவறானது என தெரிவித்துள்ளனர்.